தட்டை மீன்கள்
தட்டை மீன்கள் (Flatfish) என்பது புளுரோநெக்டிபாம்ஸ் பிரிவைச் சார்ந்தது. இது கதிர் துடுப்பு மீன்வகையைச் சார்நதது. இம் மீன்கள் கெட்டிரோசொமாட்டா என்றும் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் துணைபிரிவு பெர்சிமாம்ஸில் வகைப்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய சிற்றினங்களில் இரண்டு கண்களும் தலையில் ஒரே பக்கம் அமைந்துள்ளது, அம்மீன்கள் வளர்ச்சியடையும் போது அடுத்த பக்கமோ அல்லது தலையில் வேறு இடத்திலோ அமைகிறது. சில சிற்றினங்களில் இடப்பக்க முகமானது இடப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கும். சில சிற்றினங்களில் வலப்பக்கம் முகமானது வலப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கிறது.
வகைப்பாட்டியல்
[தொகு]11 குடும்பங்களாக 700 சிற்றினங்களில் இம்மீன்கள் உள்ளன. இதில் மிகப்பெரிய குடும்பங்களாக, பொதிடே, சைனோகிளோசிடே, பாராலிசிசிடே மற்றும் சடிாலிடே ஆகியவை ஒவ்வொரு சிற்றினங்களிலும் அடங்கும். மேலே கூறப்பட்ட சிற்றினங்களில் நுாற்றுக்கும் மேற்பட்டவைகள் உள்ளன. சில குடும்பத்தில் 50 சிற்றினங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. சில குடும்பத்தில் மீன்களில் காணப்படுகின்ற ஒத்த தன்மையைப் பொறுத்து அதிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆசிரிடே என்ற மீன்களானது சொலினிடே என்ற துணைகுடும்பத்தில் முன்பு இருந்தது. அதே போன்று சமாரிடே மீன்கள் புளுரோநெக்டிடே துணைகுடும்பத்தில் இருந்தது.[1][2]
தட்டை மீன்களின் பண்புகள்
[தொகு]தட்டை மீன்கள் சமச்சீரின்மையாக உள்ளது, ஏனெனில் முதிர்ந்த மீன்களில் தலையின் கண்கள் ஒரு பக்கமே காணப்படுவதால் இவை சமச்சீரின்மை அமைப்பைக் கொண்டது. எளிய திருக்கை மீன்களை போன்று உள்ளவைகளில் முட்களானது வலது மற்றும் இடது பக்கங்களில் சரியான எண்ணிக்கைகளில் காணப்படுகின்றன. ஆனால் சில குடும்பங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே சமச்சீரின்மை காணப்படுகின்றன. மேலும் சில தனிப்பட்ட பண்பகளும் இம்மீன்களில் உள்ளன. அவையாவன: கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு இருப்பது, கடலின் மிக ஆழமான பகுதிகளில் வாழிடமாகக் கொள்வது, மீனின் மேற்பக்கத் துடுப்பானது தலையை நோக்கி வளர்ந்திருப்பது ஆகும். மீன்கள் கடலின் அடித்தளத்தில் வாழிடமாகக் கொள்வதால், அம்மீன்களின் உடலின் மேற்பரப்பில் நிறமி செல்கள் காணப்படுகின்றன, சில மீன்களில் கோடுகள் போன்று உள்ளது. சில தட்டை மீன்கள் தன்மீதுள்ள நிறமி செல்களை மாற்றக்கூடிய திறனைப்பெற்றுள்ளது. இது செபலோபேடா இனத்தைச் சார்ந்தது. தட்டை மீன்களில் கண்கள் இல்லாத பக்கமானது எப்போதும் கடலின் அடித்தளத்தையே நோக்கி இருக்கும். அதனால் அப்பகுதியானது நிறமில்லாமல் அல்லது வெளிர் நிறமாக இருக்கும்.[3] பொதுவாக தட்டை மீன்கள் உருமறைப்பு செய்து இரையைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் ஒளிரக் கூடிய கண்களைப் பெற்றுள்ளன. (எடுத்துக்காட்டு. மைக்ரோசிரோஸ் ஒசெல்லாடஸ்).அதிக அளவில், வெப்பமண்டல தட்டை மீன்கள் சிற்றினங்களில் சிறிது விசத்தன்மை உள்ளவையாக காணப்படுகின்றன.[1][4][5] அவை, ஆசிராக்காடெஸ், பிராடாசிரஸ் மற்றும் சிபிராஸ் போன்றவை முழுமையடையாத சொலிசிதிரஸ் முக்குரோசஸ் சிற்றினமானது ஒற்றிணைவு கொண்ட தட்டை புழுக்களை கொண்டது.[6][7] பிராடாசிரஸ் சூடோபைசிரஸ் நிறம் மற்றும் நீந்தக் கூடிய பேரினம் ஒத்து காணப்படுகிறது. சில ஆக்டோபஸ் சிற்றினங்கள் தட்டை மீன்களின் நிறம், வடிவம் மற்றும் நீந்தக் கூடிய தன்மைறில் ஒத்து காணப்படுகிறது. மீன்களில் சில, சிறிய வகை மீன்களை உண்ணக்கூடியது. இவை நன்கு வளர்ச்சியடைந்த பற்களைக் கொண்டது. பெரும்பாலான மீன்கள் கடலின் அடிப்பகுதியிலேயே வாழக் கூடியது. இவை முதுகெலும்பற்ற உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. சில சமச்சீரின்மை உயிரிகளில் ஒருபக்கம் பற்களானது தாடையில் இருப்பதில்லை.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Randall, J. E. (2007). Reef and Shore Fishes of the Hawaiian Islands. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-929054-03-3
- ↑ Cooper, J.A.; and Chapleau, F. (1998). Monophyly and intrarelationships of the family Pleuronectidae (Pleuronectiformes), with a revised classification. Fish. Bull. 96 (4): 686–726.
- ↑ 3.0 3.1 Chapleau, Francois; Amaoka, Kunio (1998). Paxton, J.R.; Eschmeyer, W.N. (eds.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. xxx. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
{{cite book}}
: Unknown parameter|nopp=
ignored (help) - ↑ Elst, R. van der (1997) A Guide to the Common Sea Fishes of South Africa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1868253944
- ↑ Debelius, H. (1997). Mediterranean and Atlantic Fish Guide. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3925919541
- ↑ Practical Fishkeeping (22 May 2012) Video: Tiny sole mimics a flatworm. பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம் Retrieved 17 May 2014.
- ↑ Australian Museum (5 November 2010). This week in Fish: Flatworm mimic and shark teeth. பரணிடப்பட்டது 2013-02-26 at the வந்தவழி இயந்திரம் Retrieved 17 May 2014.